
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026
அரச நிறுவனங்கள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை கோருகிறதென்றால், அந்த அலுவலகமே முதலில் அந்த மதிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். எனவே, இந்த அலுவலகம் 2025/2026 தேசிய உற்பத்தித்திறன் விருது போட்டிக்கு விண்ணப்பிக்கின்றது — இது இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி அலுவலகம் ஒன்று இவ்விண்ணப்பத்தை மேற்கொள்ளும் முதல் தருணமாக வரலாற்றில் பதிவாகும். பதவியணி பயிற்சி, முறைமை மதிப்பாய்வு மற்றும் விருது அளவுகோல்களுக்கு ஏற்ப நடைமுறைகளை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட முழுமையான உள்நிறுவன தயார்படுத்தல் செயல்முறையை அலுவலகம் நிறைவு செய்துள்ளது. சமர்ப்பிப்புக்கான ஆவணப்படுத்தல் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த விருதுக்காக போட்டியிடுவது வெறும் அங்கீகாரம் பெறுவதற்கான விடயத்துக்காக மட்டுமல்ல, மற்றவர்களிடம் உயர்ந்த தரங்களை கோரும் அலுவலகம் தானே அந்த தரங்களுக்கேற்ப செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு அரச நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கும் இது சமிக்ஞை செய்கிறது.
