எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
பொதுமக்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பாராளுமன்ற பொறுப்புணர்வை பேணுவதிலும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம், இலங்கையின் சனநாயக உரையாடலை வலுப்படுத்துதல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.


எங்கள் பார்வை, பணி மற்றும் நோக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், இலங்கையின் சனநாயக ஆட்சிக்காக எமது பணி மற்றும் அர்ப்பணிப்பை வடிவமைக்கும் தெளிவான கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.
நோக்கம்
பாராளுமன்ற நடவடிக்கைகள், பொதுப் பொறுப்புகள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பு, ஆவணங்களைத் தயாரித்தல், தகவல் சேகரிப்பு மற்றும் பௌதீக வசதிகளை வழங்குதல் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
- 1பாராளுமன்ற நடவடிக்கைகள், பொதுப் பொறுப்புகள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பு, ஆவணங்களைத் தயாரித்தல், தகவல் சேகரிப்பு மற்றும் பௌதீக வசதிகளை வழங்குதல் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
- 2அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளை கண்காணித்து தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அரச கொள்கைகளை ஆராய்ந்து செயலாற்றுகை அறிக்கைகளைத் தயாரித்து எதிர்க்கட்சியின் மூலோபாய பதில்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
- 3அரசாங்கத்தால் முன்மொழியப்படும் திட்டங்கள் குறித்து நிபுணத்துவக் கருத்துகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் சுருக்கமான கொள்கைக் குறிப்புகளை தயாரித்து பாராளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க பதிலளிப்பதற்கு வசதிகளை வழங்குதல்.
- 4அபிவிருத்திக்கான மாற்றுக் கொள்கை கட்டமைப்பு மற்றும் நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க நிபுணத்துவக் கொள்கை உருவாக்குநர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்தல் மற்றும் முறையான விரிவான மாற்றுகள் மூலம் அரசாங்க முன்மொழிவுகளுக்கு தேசிய சவால்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- 5நிர்வாகத்தின் பலவீனங்களை கணித்து சனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த காலத்துக்கேற்ற கண்காணிப்பு மூலம் எதிர்க்கட்சியின் பதில்களுக்கு வலையமைப்பு அடிப்படையிலான முறைமையை உறுதிப்படுத்துதல்.
- 6தகவல் பிரவேச வாய்ப்புகளை உறுதிசெய்து, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்த எதிர்க்கட்சியின் சவால்களை பாராளுமன்ற கேள்விகள் மற்றும் குழுக்கள் மூலம் வினவுவதற்கு வசதிகளை வழங்குதல்.
- 7எதிர்க்கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் உறுப்பினர்களையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக ஒருங்கிணைத்தல், அதற்கான வளப் பகிர்வு மூலம் அரசாங்கத்தின் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்துவதற்கான பொறுப்பு.
- 8எதிர்க்கட்சியின் நோக்கங்களை அடைவதற்கும் மேற்பார்வை திறன்களை மேம்படுத்துவதற்கும் சிவில் சமூகம், வெகுசன ஊடகங்கள், சட்டத் துறை, பிரசைகள் குழுக்களுடன் நேரடி உறவுகளை கட்டியெழுப்புதல்.
Social Media
X / Twitter
YouTube




















