
சுற்றாடல் பாதுகாப்பு
இலங்கையின் சுற்றாடல் சவால்கள் நிர்வாக சவால்களும் கூட. காடழிப்பு, சுற்றாடல் மாசடைதல், கடலரிப்பு மற்றும் காலநிலை அபாயங்கள் அனைத்தும் கொள்கை முடிவுகள் இருக்கும் அல்லது இல்லாத நிலையைப் பிரதிபலிக்கும் காரணிகளாகும். பாராளுமன்ற விவாதங்களில் சுற்றாடல் பாதுகாப்பை நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆக்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. சபையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நம் இயற்குச் சூழலுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நிர்வாக தோல்விகளை முன்னிலைப்படுத்தி வலுவான சுற்றாடல் கொள்கைகளுக்காக அலுவலகம் குரல் கொடுக்கிறது. நிர்வாகத்திற்குள் சுற்றாடல் பொறுப்புள்ள நடைமுறைகளை செயல்படுத்தி, இந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளையும் திட்டமிட்டு வருகிறோம். சுற்றாடல் நெருக்கடிகள் வெடிக்கும் வரை காத்திருக்காமல், சேதம் மீளாத நிலைக்கு செல்வதற்கு முன்பே முன்கூட்டிய எச்சரிக்கைகள் வழங்கி, ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்மொழியும் செயல்திறன்மிக்க கண்காணிப்பு நிறுவனமாக அலுவலகத்தின் பங்கை இக்ருத்திட்டம் பிரதிபலிக்கிறது.
